மிடில் ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட பும்ரா! தோல்வி பயத்தில் ரூட்: வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட பும்ராவின் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு, இந்தியா 368 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து ஆடி வரும் இங்கிலாந்து அணி, ஐந்தாம் நாளான இன்று சற்று முன் வரை 6 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்து திணறி வருகிறது.
இன்னும் 4 விக்கெட்டை வீழ்த்தினால், இந்தியா வெற்றி பெற்றுவிடலாம் என்பதால், தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராடி வருகிறது. இந்நிலையில், ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வலுவாக இருந்தது.
1️⃣0️⃣0️⃣ Test wickets for Bumrah! ?
— Sony Sports (@SonySportsIndia) September 6, 2021
He shatters the stumps and gets there in true Bumrah style!
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! ?#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Bumrah #Pope pic.twitter.com/8CMDvdrevy
ஆனால் அந்த நம்பிக்கையை தன்னுடைய துல்லியமான யார்க்கர் பந்து வீச்சு மூலம் பும்ரா தகர்த்தார். குறிப்பாக பேர்ஸ்டோவ் மற்றும் ஓலிபோப்பின் விக்கெட்டை அவர் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
Stump Tod… Bumrah is a beast.
— Virender Sehwag (@virendersehwag) September 6, 2021
Kya spell hai… Terrific
pic.twitter.com/vIYDXDPE8B