பிரித்தானியர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் அவசர எச்சரிக்கை
பிரித்தானியாவில் கனமழை காரணமாக பெருவெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெருவெள்ள எச்சரிக்கை
இன்று இடியுடன் கூடிய கன மழை பொழிய இருப்பதைத் தொடர்ந்து, 30 மைல் நீள பிரித்தானிய கடற்கரைக்கு பெருவெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Cumbria பகுதி, வடக்கே Silloth முதல் தெற்கே Saint Bees வரையிலான பகுதிகள் ஐரிஷ் கடலிலிருந்து வரும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இன்றிரவு:
இன்றிரவு கிழக்கு பகுதிகளில் மழை பெய்தாலும் அது விரைவில் நின்றுவிடும் என்றும், இருந்தாலும், தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தென்மேற்கு வேல்ஸ் ஆகிய இடங்களுக்கும், வட அயர்லாந்துக்கும் கூட மழை பரவலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வியாழன்:
நாளை, வியாழக்கிழமை, ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்றும், அது கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு மெதுவாக பரவும் என்றும், நாள் முழுவதும் மழை பொழியலாம் என்றும், சில இடங்களில் கனமழை பொழியலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |