ஒரு கப் பொட்டுக்கடலை போதும்.., 15 நிமிடத்தில் பர்பி செய்யலாம்
பொட்டுக்கடலை புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்த ஒரு சிறந்த சிற்றுண்டி.
இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்துகிறது, மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
அதன்படி, வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பொட்டுக்கடலை பர்பியை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பொட்டுக்கடலை பர்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பொட்டுக்கடலை- 1 கப்
- நெய்- தேவையான அளவு
- காய்ச்சிய பால்- 2 கப்
- பொடித்த கல்கண்டு- 1 கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் பொட்டுக்கடலையை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் ஒரு கப் பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து பால் சுண்டி வரும்வரை கொதிக்கவைத்து பின் ஆறவைக்கவும்.

பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஆறவைத்த கலவை மற்றும் ஒரு கப் பால் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து அரைத்த கலவை சேர்த்து கிளறி பின் பொடித்த கல்கண்டு சேர்த்து நன்கு கிளறவும்.
இறுதியாக இதில் ஏலக்காய் தூள் மற்றும் அவ்வப்போது நெய் சேர்த்து ஒட்டாமல் வரும்வரை கிளறி இறக்கினால் சுவையான பொட்டுக்கடலை பர்பி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |