சுவிஸில் பொலிஸ் அதிகாரிகளாக நடித்து மூதாட்டியிடம் மர்ம நபர்கள் செய்த செயல்! காவல்துறை எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் மர்ம நபர்கள் மூதாட்டியிடமிருந்து சுமார் 1 லட்சம் பிராங்க் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குற்றவாளிகள் பொலிஸ் அதிகாரிகளாக நடித்து, 73 வயதான மூதாட்டியிடமிருந்து சுமார் 1,00,000 பிராங்க் மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
மேசாடி குறித்து Zug வெளிட்ட தகவலின் படி, தொலைபேசியில் மூதாட்டியை அழைத்த போலி பொலிஸ் பெண் ஒருவர், அவருக்கு உதவ விரும்புவதாகக் கூறியுள்ளார்.
தொலைபேசியில், அந்தப் பெண் யாரிடமும் எதுவும் பேச வேண்டாம் என்றும் உடனடியாக தனது பணத்தையும் விலைமதிப்பற்ற பொருட்களையும் பொலிசாரிடம் ஒப்படைக்கும்படி மூதாட்டியிடம் கோரியுள்ளார்.
மோசடி செய்பவர்களின் விடாமுயற்சி வயதான பெண்ணை அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
பயத்தில் மூதாட்டி தனது வங்கியில் இருந்து பணத்தையும் மதிப்புமிக்க பொருட்களையும் பாதுகாப்பாக எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ளார்.
இதன் பின்னர், மூதாட்டியின் குடியிருப்புக்கு நேரில் சென்ற மற்றொரு போலி பொலிஸ்காரர், அவரை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது மூதாட்டி கவனக்குறைவாக இருந்த நேரம் பார்த்து, மோசடி செய்தவர் 1,00,000 பிராங்க் மதிப்புள்ள ரொக்கத்தையும் மதிப்புமிக்க பொருட்களையும் எடுத்துக்கொண்டு குடியிருப்பில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
தான் மோசடிக்கு ஆளானததை உணர்ந்த மூதாட்டி, Zug பொலிசில் புகார் அளித்துள்ளார்.
Zug பொலிசார், சம்பவம் குறித்தும், அடையாளம் தெரியாத குற்றவாளிகள் பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற மோசடிகாரர்களுக்கு எதிராக Zug காவல்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இதுபோன்ற அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.