சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்கள்
Burglaries in Switzerland are becoming more frequent: சுவிட்சர்லாந்தில் கொள்ளைச் சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளதாக காப்பீட்டு நிறுவனம் ஒன்று கூறுகிறது.
சுவிஸ் காப்பீட்டு நிறுவனமான Helvetia, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்கள்
2021க்கும் 2025க்கும் இடைப்பட்ட காலத்தில், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் Helvetia காப்பீட்டு நிறுவனத்திடம் அளிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை, 10,000 காப்பீட்டு பாலிசிகளுக்கு 27இலிருந்து 42ஆக உயர்ந்துள்ளது.

இது கிட்டத்தட்ட 60 சதவிகித அதிகரிப்பாகும். அந்த கொள்ளைச் சம்பவங்களால், கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களைத் தவிர்த்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் சராசரி மதிப்பு, 9 சதவிகிதம் அதிகரித்து, 7,100 சுவிஸ் ஃப்ராங்குளைத் தாண்டியுள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் சுமார் கால்வாசி, பகல் நேரம் மிகவும் குறைவாக இருக்கும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிகழ்கின்றன.
அத்துடன், மக்கள் வசிக்கும் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆய்வு செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளில், ஜெனீவாவில்தான் மிக அதிக அளவில் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அதேபோல, அடுக்குமாடிக் கட்டிடங்களில் உள்ள வீடுகளைக் காட்டிலும், தனி வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் 72 அதிகமாக இருந்துள்ளது. வீடுகளுக்கு அருகில் மக்கள் வசிப்பதால் கிடைக்கும் இயற்கையான பாதுகாப்பு இதற்கு ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என்கிறது Helvetia.
ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்தப் புள்ளிவிவரங்கள், பொலிசாரின் பதிவுகளின் அடிப்படையிலானவை அல்ல. அவை, காப்பீட்டு நிறுவனம் ஒன்றிடம் சமர்ப்பிக்கப்பட்ட காப்பீட்டுக் கோரிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை!