பிரித்தானியாவில் கைகள் வெட்டப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நபர்: சிறுமிகள் இருவர் கண்ட கோர காட்சி
பிரித்தானியாவில் தந்தை ஒருவர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் கால் விரல்கள் மட்டும் வெளியே தெரிய சிறுமிகள் இருவர் அடையாளம் கண்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் மிடில்ஸ்பரோ பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிலேயே 39 வயதான Tomasz Dembler புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கொல்லப்படுவதற்கு முன்னர் அவரது கைகள் வெட்டப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதே அதிசயமான ஒன்று என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் தரப்பு, ஏப்ரல் 12ம் திகதி அவர் கொல்லப்பட்டதற்கும் ஒரு வாரத்திற்கு பின்னர் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மரங்கள் அடர்ந்த பகுதியில் இரு சிறுமிகள் பொழுதைக் கழிக்க சென்ற நிலையில் கால் விரல்கள் மட்டும் வெளியில் தெரிய மிரண்டு போன சிறுமிகள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் தற்போது ஒரு பெண் உட்பட 6 பேர்கள் விசாரணை எதிர்கொள்கின்றனர். ஆனால் இந்த கொலை தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றே கூறி வருகின்றனர்.
போலந்து நாட்டவரான Tomasz Dembler மார்ச் 21ம் திகதி ஞாயிறன்று சுமார் 3.35 மணிக்கு கொல்லப்பட்டிருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர்.
நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.
ஆனால் அதே நாளில் உடல் முழுவதும் நொறுக்கப்பட்டு, கைகள் வெட்டப்பட்டு அவர் கொலை செய்யப் பட்டார் எனவும், அவசரமாக அவரை புதைத்துவிட்டு குற்றவாளிகள் தப்பியதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.