Burma Style Atho Noodles: எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்வது?
பர்மா உணவு முறையை சார்ந்த இவை மெல்ல மெல்ல பர்மா மக்கள் இடம் பெயர்ந்த நாடுகளில் எல்லாம் பிரபலமடைந்தது.
அதற்கு காரணம் இதனின் வித்தியாசமான சுவை தான். இதை விரும்புபவர்கள் பெரும்பாலும் இதை அத்தோ கடைகளில் தான் வாங்கி சுவைக்கிறார்கள்.
ஆனால் இதை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் வெகு சுலபமாக செய்து விடலாம்.பர்மா ஸ்டைல் அத்தோ நூடுல்ஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
Yummy Tummy Aarthi
தேவையான பொருட்கள்
- தட்டை முறுக்கு - 5
- வேர்க்கடலை-2 டீஸ்பூன்
- பொட்டுக்கடலை-4 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 10
- புளி- எலுமிச்சை அளவு
- உப்பு- 2 டீஸ்பூன்
- வெங்காயம்- 2
- பூண்டு- 1 பல்
- நூடுல்ஸ்- 200 கிராம்
- முட்டைகோஸ்- 1கப்
- கொத்தமல்லி எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் வேர்க்கடலை மற்றும் பொட்டுக்கடலையை வறுத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து காய்ந்தமிளகாயை வறுத்து அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
பின் 1கப் தண்ணீரில் எடுத்துவைத்துள்ள புளியை கரைத்து எடுத்துக்கொள்ளவும். அதே 1கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அதே எண்ணெயில் 1 பல் பூண்டை நறுக்கிய பின் பொறித்து எண்ணெய்யுடன் சேர்த்து எடுக்கொள்ளவும்.
முட்டைகோஸை நறுக்கி அலசி எடுத்துக்கொள்ளவும். பின் நூடுல்ஸை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அத்தோ செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் வேகவைத்த நூடுல்ஸ், நறுக்கிய முட்டைகோஸ், நறுக்கிய வெங்காயம், பொரித்த வெங்காயம், நறுக்கிய மல்லி இலை, பொட்டு கடலை வேர்க்கடலை பொடி ,அரைத்த மிளகாய்த்தூள், பூண்டு எண்ணெய், நொறுக்கிய தட்டை முறுக்கு , புளி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணீர் கலந்தால் சுவையான பர்மா ஸ்டைல் அத்தோ நூடுல்ஸ் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |