பிரித்தானியர்களுக்கு பல மில்லியன் பவுண்டுகள் வரிச்சுமை: புதிய ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்
Andy Burnham's Brexit betrayal will cost taxpayers hundreds of millions of pounds a year: பிரதமர் ஆன்டி பர்னாமின் புதிய ஒப்பந்தத்தால், பிரித்தானியர்களுக்கு பல மில்லியன் பவுண்டுகள் வரிச்சுமை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறார்.

அதன் தொடர்ச்சியாக பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுவருகிறார் அவர்.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் பட்சத்தில், பிரித்தானியா பெரும் தொகை செலுத்தவேண்டிவரலாம் என எதிர்தரப்பினர் எச்சரித்திருந்தார்கள்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின், வரி செலுத்துவோருக்கு எந்தச் செலவும் ஏற்படாது என வெளியுறவுச் செயலரான எட் மிலிபான்ட் தெரிவித்திருந்தார்.

பல மில்லியன் பவுண்டுகள் வரிச்சுமை
இந்நிலையில், ஆன்டி பர்னாம், தனது பிரெக்ஸிட் மறுசீரமைப்பு ஒப்பந்தத்திற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகளைச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளதாக ஒப்பந்த ஆவணங்களை மேற்கோள் காட்டி, டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய திட்டங்களில் பங்கேற்பதற்காக, 'பங்கேற்புக் கட்டணம்' எனப்படும் தொகையைச் செலுத்த ஆன்டி பர்னாம் ஒப்புக்கொண்டார் என்பதை ஒப்பந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
இனி பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றிய உணவுச் சட்டங்களைக் கண்காணிக்கவிருக்கும் ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் போன்ற, பிரஸ்ஸல்ஸைச் சேர்ந்த பல அரசு சாரா அமைப்புகளை நடத்துவதற்கான செலவிற்கு, வரி செலுத்துவோர், அதாவது பிரித்தானிய மக்கள் பங்களிக்க வேண்டும் என்பதையும் அந்த ஆவணங்கள் காட்டுகின்றன.
அத்துடன், உணவு மற்றும் விவசாயம் தொடர்பான ஒப்பந்தத்தின் மையமாக விளங்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரான எம்மா ஹார்டி, பிரித்தானியா, சில நூறு மில்லியன் பவுண்டுகள் செலுத்தவேண்டியிருக்கும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்திற்கு பிரித்தானியா மானியம் வழங்க வேண்டும் என பிரஸ்ஸல்ஸ் வலியுறுத்திவருகிறது.
ஆக, ஆன்டி பர்னாமின் பிரெக்சிட் மறுசீரமைப்பு ஒப்பந்தம், பிரித்தானியர்களுக்கு பல மில்லியன் பவுண்டுகள் வரிச்சுமையை ஏற்படுத்தப்போகிறது உண்மைதான் என்கின்றன பிரித்தானிய ஊடகங்கள்.