பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை பார்க்க விரும்புகிறேன்: ஆன்டி பர்னாம்
I want to see the UK rejoin the EU in my lifetime, Burnham says: பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை என் வாழ்நாளிலேயே பார்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.
பிரித்தானியாவில் லேபர் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவருகிறது.
முந்தைய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மரைப்போலவே, இப்போதைய பிரதமரான ஆன்டி பர்னாமும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டுவது மட்டுமல்ல, பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்...
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் ஆன்டி பர்னாம், பிரெக்சிட்டால் பிரித்தானியாவுக்கு நன்மையை விட பாதிப்புதான் அதிகம் என்று கூறியிருந்தார்.

ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை சரி செய்ய தான் முயற்சி செய்ய விரும்புவதாகவும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையக்கூடும் என்றும் கூறியிருந்தார் அவர்.
இந்நிலையில், தனது வாழ்நாளுக்குள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதைக் காண விரும்புவதாகக் கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.
அதே நேரத்தில், ஒரு பொது வாக்கெடுப்பு இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில்லா போக்குவரத்து விதிகளுக்கு பிரித்தானியாவை மீண்டும் உட்படுத்தமாட்டேன் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் கருத்தை மீறி செயல்படவோ, அல்லது தனது சொந்த நம்பிக்கைகளைத் திணிக்கவோ மாட்டேன் என்றும் ஆன்டி பர்னாம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பிரெக்சிட்டால் என்ன நடக்கும் என அப்போதிருந்தவர்கள் கூறினார்களோ, அது நடக்கவில்லை என்பதை வலியுறுத்திக் கூறவும் தவறவில்லை ஆன்டி பர்னாம்!