பிரித்தானியாவில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள ஒரு அடையாள இனவெறுப்புச் சம்பவம்
வட அயர்லாந்தில், அகதிகள் அமர்ந்திருக்கும் படகொன்றைப்போல் உருவாக்கப்பட்ட உருவ பொம்மை ஒன்று தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
குறையாத இனவெறுப்பு
காலம் மாறிவிட்டது, நாகரீகம் வளர்ந்துவிட்டது என்றெல்லாம் கூறினாலும், இனவெறுப்பு மட்டும் இன்னமும் சில மனங்களிலிருந்து நீங்கவே நீங்காது போலிருக்கிறது என எண்ணத்தூண்டும் சம்பவம் ஒன்று வட அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது.
வட அயர்லாந்திலுள்ள Moygashel என்னும் கிராமத்தில், வியாழக்கிழமை இரவு, ஆளுயர பொம்மைகள் வைக்கப்பட்ட படகொன்று தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.
அதன் கீழ் படகுகளை நிறுத்துங்கள் என எழுதப்பட்டிருக்க, அந்த படகில் வைக்கப்பட்டிருந்த ஆளுயர பொம்மைகள் நிறம் சார்ந்தவையாக உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு Life Jacketகளும் அணிவிக்கப்பட்டிருந்திருக்கின்றன.
அந்த படகு தீவைத்துக் கொளுத்தப்பட்டதும், அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாகக் குரல் எழுப்பிய விடயம், அவர்களுடைய இனவெறுப்பையும் அகதிகள் வெறுப்பையும் வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |