கனடா கடலில் தீப்பற்றி எரியும் சரக்கு கப்பல்.. நச்சு வாயு வெளியேறுவதால் அருகில் உள்ள பகுதிகளுக்கு பெரும் அச்சுறுத்தல்
கனடாவின் பசிபிக் கடற்கரையில் தீப்பற்றி எரிந்த ரசாயனங்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இந்து நச்சு வாயுவை வெளியேறுவதால் அருகில் உள்ள பகுதிக்கு பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உள்ளதாக சுற்றுச்சழல் அமைப்பு எச்சரித்துள்ளது.
சனிக்கிழமையன்று, வான்கூவர் நோக்கிச் சென்ற போது Zim Kingston என்ற சரக்கு கப்பல் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தலைநகர் விக்டொரியாவிற்கு அருகே உள்ள கடற்கரையில் Zim Kingston கப்பலில் இருந்த கண்டெய்னர் தீப்பற்றி எரிந்துள்ளது.
எப்படி தீ ஏற்பட்ட என்பது இன்னும் தெரியவில்லை.
ரசாயனங்கள் இருந்த கண்டெய்னரில் தீப்பிடித்துள்ளதாகவும், அதனால், நச்சு வாயு வெளியேறுவதாக கனடா கடலோர காவல்படை தெரிவித்திருந்தது.
52,000 கிலோ ரசாயன பொருட்களை கொண்டுள்ள இரண்டு கண்டெய்னரில் தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து நச்சு வாயு வெளியேறுவதால் அருகில் உள்ள பகுதிக்கு பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உள்ளதாக சுற்றுச்சழல் அமைப்பான அறக்கட்டளையின் தலைவர் Surfrider எச்சரித்துள்ளார்.
All fires produce toxic substances. Incident Command has detailed information on the chemicals that were on fire and are now smoldering in the containers onboard the #ZimKingston. pic.twitter.com/jtjhlJ1zAa
— Canadian Coast Guard (@CoastGuardCAN) October 24, 2021
இந்நிலையில், கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட கனடா கடலோர கவால்படை, கப்பலில் இருந்து 16 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
தீயை கட்டுக்குள் கொண்டு வந்தள்ள கனடா கடலோர கவால்படை, தொடர்ந்து கப்பலை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.