இலங்கையில் புர்காவுக்கு தடை... ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகள் மூடப்படும்! அமைச்சர் முக்கிய தகவல்
இலங்கையில் புர்காவுக்கு தடை விதிக்கப்படும் என்றும், ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகள் மூடப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு அடிப்படையில் சில முஸ்லிம் பெண்கள் அணியும் முழு முகத்தையும் மறைக்கும் முக்காடுகளை தடை செய்ய அமைச்சரவை ஒப்புதலுக்காக வெள்ளிக்கிழமை ஒரு பேப்பரில் கையெழுத்திட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.
முன்பெல்லாம் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் புர்கா அணியவே மாட்டார்கள், இது சமீபத்தில் வந்த மதவாதத்தின் அடையாளம். நாங்கள் நிச்சயமாக அதை தடை செய்யப் போகிறோம்.
தேசிய கல்வி கொள்கையை மீறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட madrassa இஸ்லாமிய பள்ளிகளை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வீரசேகர கூறினார்.
யார் வேண்டுமானாலும் பள்ளியைத் திறந்து, நீங்கள் எதை வேண்டுமானாலும் குழந்தைகளுக்கு கற்பிக்க முடியாது என்று வீரசேகர கூறினார்.