ஜேர்மனி போக்குவரத்து யூனியன் வேலைநிறுத்தம்: ஸ்தம்பித்த மாகாணங்கள்
ஜேர்மன் போக்குவரத்து யூனியன் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தத்தால், ஜேர்மன் மாகாணங்கள் பலவற்றில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
ஸ்தம்பித்த மாகாணங்கள்
ஜேர்மனியின் பிரதான போக்குவரத்துத் தொழிலாளர்கள் யூனியனான Verdiயின் அழைப்புக்கிணங்க, ஜேர்மன் மாகாணங்கள் பலவற்றில் போக்குவரத்து அமைப்புகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
அதனால், பல மாகாணங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, Hamburg, North Rhine-Westphalia மற்றும் Saxony-Anhalt ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
Klaus-Dietmar Gabbert/dpa/picture alliance
பவேரியா மாகாண தலைநகரான மியூனிக்கில் பேருந்துகள் மற்றும் ட்ராம்கள் கூட இயங்கவில்லை.
பணியாளர்களுக்கு நல்ல வேலைச்சூழல், குறைவான நேரம் வேலை, இரவுப்பணி மற்றும் வார இறுதிப்பணிக்கு ஊக்கத்தொகை, ஊதியம், நீண்ட ஓய்வு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து யூனியன் வேலைநிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ளது.
விடயம் என்னவென்றால், கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் துவங்கி நான்கு மாதங்கள் ஆகியும், இதுவரை பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |