பிரித்தானியாவில் பேருந்து சாரதி உயிரிழப்பு தொடர்பில் நபர் ஒருவர் கைது
பிரித்தானியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் பேருந்து சாரதி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து விபத்துக்கு காரணமாக இருந்த வேன் சாரதியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாலை விபத்து
பிரித்தானியாவில் ஆகஸ்ட் 14ம் திகதி கிழக்கு அயர்ஷயரில் A77 பகுதியில் ஸ்டேஜ்கோச் சிங்கிள் டெக்கர் பேருந்தும் வெள்ளை ஃபோர்டு ட்ரான்சிட் வேனும் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது.
இதில் 23 வயதான பேருந்து சாரதி கோர்டன் ஸ்டிர்லிங் மற்றும் 42 வயதான வேன் சாரதி இருவரும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விபத்து ஏற்பட்டு 5 நாட்கள் பிறகு குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் 23 வயதான பேருந்து சாரதி கோர்டன் ஸ்டிர்லிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பேருந்து சாரதி கோர்டன் ஸ்டிர்லிங் உயிரிழப்பு தொடர்பாக கொலை விசாரணையை தொடங்கி இருப்பதாக ஸ்காட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேருந்து சாரதி கோர்டன் ஸ்டிர்லிங் உயிரிழப்பில் தொடர்புடைய வேன் சாரதி தற்போது கைது செய்யப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |