பிரதான சாலையில் நெருப்பு கோளமான பேருந்து... பயணிகள் பலர் உடல் கருகி மரணம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று பிரதான சாலையில் தீப்பிடித்து எரிந்ததில் 20 பயணிகள் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ளனர்.
57 பயணிகள்
செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இச்சம்பவத்தில் மொத்தம் 57 பயணிகளுடன் தொடர்புடைய பேருந்தானது ஜெய்சால்மரில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டுள்ளது.
ஜெய்சால்மர்-ஜோத்பூர் பிரதான சாலையில், பேருந்தின் பின்புறப் பகுதியிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. துரிதமாக செயல்பட்ட சாரதி, சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
ஆனால் அடுத்த நொடி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. உள்ளூர்வாசிகளும், அவ்வழியாகச் சென்றவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் உதவினர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீக்காயங்கள்
முதற்கட்ட விசாரணையில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, விபத்துக்குள்ளான பேருந்து ஐந்து நாட்களுக்கு முன்புதான் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நான்கு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட பதினைந்து பயணிகள் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானார்கள், சிலர் 70 சதவீதம் வரை தீக்காயங்களுக்கு ஆளாகினர்.
முதலில் அவர்கள் மூன்று ஆம்புலன்ஸ்கள் மூலம் ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் மேம்பட்ட சிகிச்சைக்காக ஜோத்பூருக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |