பிரித்தானியாவில் விபத்துக்குள்ளான பேருந்து: பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து
பிரித்தானியாவின் ஏர்லி(Earley) பகுதியில் நடந்த பேருந்து விபத்து சம்பவத்தில் 9 பள்ளி மாணவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பேருந்து விபத்து
பிரித்தானியாவில் காலை 8.25 மணியளவில் ஏர்லி(Earley) பகுதியில் உள்ள A3290 சாலை மற்றும் சுட்டன் சீட்ஸ்(sutton Seeds) சுற்றுச்சாலையை இணைக்கும் இடத்தில் கோச்(Coach) ரக வாகனமும், பேருந்து ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து சம்பவத்தில் 9 பள்ளி மாணவர்கள் உட்பட பெரியவர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிஸார், விரைந்து வந்து மீட்பு பணிகளை மூடுக்கிவிட்டனர்.

காயமடைந்தவர்களில் ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெரியவர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் இன்று காலை இரண்டு கார்கள் மோதிக் கொண்ட மற்றொரு விபத்தும் ஏற்பட்டுள்ளது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |