லொட்டரி டிக்கெட்டே வாங்காமல் ரூ.1 கோடி வென்ற பஸ் கண்டக்டர்.., ஒரே இரவில் கொட்டிய பணம்
கேரளாவில் பஸ் கண்டக்டர் ஒருவர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் ரூ.1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை வென்ற அதிசய சம்பவம் நடந்துள்ளது.
ஒரே இரவில் அடித்த அதிர்ஷ்டம்
இந்திய மாநிலமான கேரளாவில் மாநில அரசே லொட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. அங்கு நடக்கும் தினசரி லொட்டரி குலுக்கலில் முதல் பரிசாக ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
இதனை லட்சக்கணக்கான மக்கள் வாங்கி செல்வதை போல கேரளாவில் உள்ள தனியார் பஸ் கண்டக்டர் ஜெயேஷ் என்பவரும் வாங்க நினைத்துள்ளார்.
அங்கு நடைபெறும் தனலட்சுமி லொட்டரி குலுக்கலுக்கான லொட்டரி டிக்கெட்டை வாங்குவதற்கு அவரிடம் பணமில்லை.
இதனால் அவர் கலேபேட்டா பேருந்து நிலையம் அருகே அம்மா லொட்டரி ஏஜென்சி என்ற பெயரில் கடை நடத்தி வரும் ஆரொஷ் கிரன் என்பவரிடம், இந்த லொட்டரி டிக்கெட்டை எடுத்து வையுங்கள், காசு கொடுத்து வாங்கி கொள்கிறேன் என்று கூறி விட்டு லொட்டரி எண்ணை மட்டும் பார்த்து சென்றுள்ளார்.
இதையடுத்து, லொட்டரியில் முதல் பரிசை வென்றுள்ளதாக கடை ஊழியர்கள் கண்டக்டருக்கு போன் செய்துள்ளார். முதலில் அவர் நம்பவில்லை, பின்னர் அவர் இன்ப அதிர்ச்சிக்குள்ளானார்.
இதில், லொட்டரி டிக்கெட்டை ஜெயேஷ் பணம் கொடுத்து வாங்காவிட்டாலும் இந்த டிக்கெட் அவருடையது தான் பெருந்தன்மையுடன் கூறியுள்ளார் கடை ஓனர் ஆரோஷ்.
மேலும், இந்த பணத்தை வைத்து நிலத்தில் முதலீடு செய்வதாக கூறிய ஜெயேஷ்க்கு ரூ.68 லட்சமும், நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆரொஷ்க்கு ஏஜெண்ட் கமிஷனாக ரூ.9.5 லட்சமும் கிடைக்கவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |