லண்டனில் கத்தியால் குத்தப்பட்ட சிறுமி விவகாரம்... வெளியாகியுள்ள திடுக் தகவல்கள்
பிரித்தானியாவில் கத்திக் குத்து சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை ஒரு சிறுமி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
யார் அந்தச் சிறுமி?
கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட அந்த சிறுமியின் பெயர் Eliyanna என்று தெரியவந்துள்ளது. 15 வயதான அந்தச் சிறுமி, பள்ளிக்குச் செல்லும் வழியில் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
Credit: Jeremy Selwyn
என்ன காரணம்?
உண்மையில், அந்தச் சிறுமிக்கும் கொலை செய்த நபருக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. 17 வயது பையன் ஒருவன், இந்த சிறுமியின் தோழியைக் காதலித்துள்ளான். இருவரும் சமீபத்தில் பிரிந்துவிட்டிருக்கிறார்கள்.
Credit: PA
அவனுக்கு சொந்தமான சில பொருட்களை அவனிடம் திருப்பிக் கொடுப்பதற்காக அந்த சிறுமி கொண்டு வந்திருக்கிறாள். ஆனால், அந்தப் பையனோ, மீண்டும் தங்கள் காதலை புதுப்பித்துக்கொள்ள விரும்பியிருக்கிறான்.
சில நண்பர்களுடன், ஒரு பூங்கொத்தையும், காதல் கடிதம் ஒன்றையும் கொண்டு வந்த அந்தப் பையன், அவளிடம் அவற்றைக் கொடுக்க முயல, அவளோ அதை ஏற்றுகொள்ள மறுத்திருக்கிறாள். இந்த விடயங்கள் அனைத்தும், அவர்கள் அனைவரும் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றில் நிகழ்ந்துள்ளன.
Credit: Peter Jordan
தன் காதலை அவள் ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே தான் கொண்டு வந்த கத்தி ஒன்றை எடுத்திருக்கிறான் அவன். அப்போது தன் தோழியைக் காப்பாற்ற இந்த 15 வயது சிறுமி குறுக்கே வர, ஆத்திரத்தில் அவளைக் கத்தியால் குத்தியிருக்கிறான் அந்தப் பையன்.
கழுத்திலும் நெஞ்சிலும் கத்தியால் குத்தப்பட்ட அந்த சிறுமியைக் காப்பாற்ற, அந்த பேருந்தின் சாரதியும் பெண் ஒருவரும் முயன்ற நிலையிலும், அவள் பரிதாபமாக உயிரிழந்துள்ளாள்.
Credit: LNP
குற்றவாளி கைது
சிறுமியைக் குத்திய அந்தப் பையன் தப்பி ஓடிவிட்டிருக்கிறான். New Addington என்னுமிடத்தில் ட்ராம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த அவனை பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளார்கள்.
காவலில் அடைக்கப்பட்டுள்ள அவனிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
Credit: Getty
பிரித்தானியாவில் ஏன், லண்டனில் இப்படி பட்டப்பகலில் கத்திக் குத்து சம்பவம் நடப்பது ஒன்றும் இது முதல் முறை அல்ல.
வாழவேண்டிய வயதில் பல இளம் பிள்ளைகள், சிறுவர்கள் இதேபோல் கொல்லப்பட்ட நிலையிலும், பயங்கர கொலைக்கருவிகளாகிய கத்திகள் இன்னமும் சமுதாயத்தில் உலவுவது எப்படி என பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை முறை கேள்வி எழுப்பியும் எந்த பயனும் இல்லை என்பதுதான் உண்மை.
Credit: PA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |