இலங்கையில் தனியாக பயணிகளுக்கு காத்திருக்கும் அபாயம்: பொலிஸார் விடுத்த எச்சரிக்கை
இலங்கையில் தனியாக பயணிக்கும் நபர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு நகரத்திலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு தனியாக பேருந்தில் பயணிக்கும் பொது மக்களுக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட் ஆகியவற்றை கொடுத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இத்தகைய கொள்ளை கும்பல்களிடம் இருந்து கவனமாக இருக்குமாறு கிழக்கு மாகாணப் பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் எச்சரித்துள்ளார்.
சக பயணி போல அருகே அமர்ந்து மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டை கொடுத்து பின்னர் பயணிகளிடம் இருந்து காப்பு மோதிரம், சங்கிலி, தங்க ஆபரணங்கள் மற்றும் கைபையில் உள்ள பணம் என கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பயணி கண் விழிப்பதற்குள் கொள்ளையர்கள் ஏதாவது ஒரு இடத்தில் இறங்கி விடுகின்றனர்.
சில நேரங்களில் மயக்கமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 3 தினங்களுக்கு பிறகு தான் சுயநினைவுக்கு வருகிறார்கள்.
எனவே பேருந்தில் தனியாக பயணம் செய்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிட கூடாது, மேலும் விழிப்பாகவும், அவதானமாகவும் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |