5 கோடி அமேசான் பங்குகளை விற்கும் Jeff Bezos., இந்தப் பங்குகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Amazon நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) அடுத்த ஆண்டில் நிறுவனத்தின் 50 மில்லியன் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளார்.
அவர் வைத்துள்ள அமேசான் பங்குகளின் மொத்த மதிப்பு $8.6 பில்லியன் ஆகும். இலங்கை பணமதிப்பில் ரூ. 2,68,391 கோடி ஆகும்.
இப்போது அமேசான் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 171.8 டொலர்கள் (சுமார் ரூ.55770) ஆகும்.
Elon Musk சொத்துமதிப்பை ஒரே நாளில் சம்பாதித்த Mark Zuckerberg நிறுவனம்., Apple-இன் சாதனையை முறியடித்த Meta
நிறுவனத்தின் ஆண்டறிக்கையின்படி., பங்கு விற்பனைக்கான திட்டம் கடந்த 8ஆம் திகதி தொடங்கியது.
அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் எதிர்பார்த்ததை விட சிறந்த விற்பனைக்குப் பிறகு அமேசான் பங்குகள் வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 8 சதவீதம் உயர்ந்தன.
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அமேசானின் ஆன்லைன் விற்பனை கடந்த காலாண்டில் மிகப்பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அமேசான் பங்குகள் கடந்த ஆண்டில் 80 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, பெஞ்ச்மார்க் S&P 500 குறியீட்டை விட சிறப்பாக செயல்பட்டன.
பெசோஸ் 1994இல் அமேசானை நிறுவினார். Bloomberg Billionaires Index-ன்படி, பெசோஸ் தற்போது 185 பில்லியன் சொத்து மதிப்புடன் உலகின் மூன்றாவது பணக்காரர் ஆவார்.
இதற்கிடையில், ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட்டும் கடந்த ஆண்டு அமேசானில் தனது 25 சதவீத பங்குகளை (6.53 கோடி பங்குகள்) விற்றார். அமேசானில் அவரது பங்கு 1.9 சதவீதமாக சரிந்தது.
ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் திருமணமான 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2019-இல் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அந்த நேரத்தில், மெக்கன்சி ஸ்காட் அமேசானில் 4 சதவீத பங்குகளைப் பெற்றார், அதன் மதிப்பு 36 பில்லியன் டொலர்கள்.
அதன் மூலம் உலக பணக்கார பெண்கள் பட்டியலில் இணைந்தார். இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், அவர் தனது செல்வத்தில் பாதியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Jeff Bezos to sell up to 50 million Amazon shares, Jeff Bezos Amazon Shares, Amazon CEO Jeff Bezos