மேக்ரானுக்கு கடைசி வாய்ப்பு... கலவரங்களில் நஷ்டமடைந்த பெண் கூறும் செய்தி
Macron has one more chance to save the country, business owner warns: மேக்ரானுக்கு நாட்டைக் காப்பாற்ற இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது என்கிறார் பிரான்ஸ் கலவரங்களில் நஷ்டமடைந்த பெண் ஒருவர்.
கடந்த வாரம் பிரான்சில் நடைபெற்ற கலவரங்களால் பெரும் சேதமும் இழப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் நாளை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நஷ்டமடைந்த பெண் கூறும் செய்தி
கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது நிகழ்ந்த வன்முறையில் பொதுச்சொத்துகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 15 கடைகளுக்குச் சொந்தக்காரரான மிச்செல் (Michele Teboul) என்னும் பெண்மணி, தன் குடும்பத்துக்கு சொந்தமான கடைகள் பதினைந்துமே சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவற்றில் ஐந்து கடைகள் முற்றிலும் நாசமாகிவிட்டதாக தெரிவிக்கும் மிச்செல், காப்பீடு பெறுவதிலும் பிரச்சினை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதால், பலர் தங்கள் கடைகளை பாதுகாக்க ஆயுதம் வாங்கியிருப்பதாக தெரிவிக்கும் மிச்செல், தன் குடும்பம் ஆயுதம் எதையும் வாங்கப்போவதில்லை என்கிறார்.
அதிகாரிகள் கடைகளை பாதுகாக்க போதுமான பொலிசாரை அனுப்பவில்லை என்று கூறும் மிச்செல், அடுத்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்பாவது பொதுமக்களை அவர்கள் பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு செய்தி ஒன்றைக் கூறியுள்ள மிச்செல், பிரான்சைக் காப்பாற்ற கடைசியாக சனிக்கிழமை உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்கிறார்.

மேக்ரானும் உள்துறை அமைச்சரான லாரன்ட் நுனெஸும் சனிக்கிழமை நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அது பிரான்சுக்கு நஷ்டம் என்கிறார் அவர்.
பிரான்ஸ் மக்கள் பாதுகாப்பாக உணரவேண்டும், இந்த கணத்தில் நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்று கூறும் மிச்செல், மக்களைக் காப்பாற்ற மீண்டும் மேக்ரான் தவறுவாரானால், மேக்ரான் அரசு அதன் பாதிப்பை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார்.
’அரசே கவிழக்கூடும்’ என்றும் எச்சரிக்கிறார் மிச்செல்!