பிரான்சில் நடக்கும் உச்சி மாநாடு: சுவிஸ் வர்த்தகர்கள் முன்னெச்சரிக்கை கோரிக்கை
ஜூன் மாதம் பிரான்சின் G7 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுவிஸ் அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்கள் சுவிஸ் வர்த்தகர்கள்.
ஆறாத காயம்
2003ஆம் ஆண்டு, பிரான்சிலுள்ள Évian-les-Bains என்னுமிடத்தில் G8 உச்சி மாநாடு நடைபெற்றது.

மாநாட்டுக்கு முந்தைய இரவு, உலகமயமாக்கலுக்கு எதிரான அமைப்பொன்றைச் சேர்ந்த சிலர் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
ஆர்ப்பாட்டமாக துவங்கிய விடயம், சூறையாடலில் முடிந்தது. ஆடம்பர பொருட்கள் விற்பனை நிலையங்கள், கடைகள் என அனைத்தையும் நொறுக்கிய ஒரு கூட்டம் பொருட்களை சூறையாடியது.
அப்போது நிகழ்ந்த வன்முறை, சூறையாடலால் ஏற்பட்ட இழப்பு ஆகியவற்றின் காயம் மனதளவில் இன்னமும் பலருக்கும் ஆறவில்லை.
ஆக, மீண்டும் இந்த ஆண்டு ஜூன் மாதம், அதே Évian-les-Bainsஇல் G7 உச்சி மாநாடு நடைபெற உள்ளதால், ஜெனீவா வர்த்தகர்கள் அது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு மாகாண அரசை வலியுறுத்திவருகிறார்கள்.
சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் துறை ஆகியவை ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் நிலையில், மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஏதேனும் நிகழுமானால், அது மோசமான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் சம்பந்தப்பட்ட துறையினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |