மெஸ்ஸி vs ரொனால்டோ ஆட்டம்: உலகிலேயே மிக அதிக விலைக்கான டிக்கெட்டை வாங்கிய நபர்
மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ அணிகளுக்கு இடையேன நட்பு ரீதியான கால்பந்து ஆட்டத்தை கண்டுகளிக்க உலகிலேயே மிக அதிக விலைக்கான டிக்கெட்டை வாங்கியுள்ளார் ஒருவர்.
மெஸ்ஸியும் ரொனால்டோவும்
உலக கால்பந்து ரசிகளால் கொண்டாடப்படும் முக்கிய கால்பந்து வீரர்களில் மெஸ்ஸியும் ரொனால்டோவும் தனியிடம் பெறுகிறார்கள். தற்போது இந்த இரு நட்சத்திரங்களும் முதன் முறையாக நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள்.
@Shutterstock
சவுதி அரேபிய கால்பந்து அணியான அல் நசரில் ரொனால்டோ இணைந்துள்ள நிலையில், இந்த நட்பு ரீதியான ஆட்டம் முன்னெடுக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் செல்வந்தர் ஒருவர் 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கான டிக்கெட்டை சொந்தமாக்கியுள்ளார்.
ஒரு கால்பந்து விளையாட்டு டிக்கெட்டுக்காக தனியொருவர் செலவிடும் மிகப் பெரிய தொகை இதுவென கூறப்படுகிறது. சவுதி அணிக்கான கேப்டனான ரொனால்டோ களமிறங்கும் இந்த ஆட்டத்தை காணவே, சவுதி செல்வந்தர் ஒருவர் பெருந்தொகையை செலவிட்டுள்ளார்.
டிக்கெட் விலை 2.2 மில்லியன்
மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ விளையாடும் இந்த ஆட்டத்தில் இருந்து திரட்டப்படும் தொகையானது சவுதி அரேபியாவின் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அளிக்கப்படுகிறது.
@getty
ரொனால்டோ அல் நசர் அணிக்காக களமிறங்கும் போது மெஸ்ஸி அல் ஹிலால் அணிக்காக களமிறங்க இருக்கிறார்.
அல் ஹிலால் அணியானது ஆண்டுக்கு 245 மில்லியன் பவுண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ள மெஸ்ஸியுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது.