பில்டிங் கான்ட்ராக்டருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சை பரிசளித்த தொழிலதிபர்
தனது ஆடம்பர பங்களாவை கட்டி முடித்த கட்டட ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான ரோலக்ஸ் வாட்சை தொழிலதிபர் பரிசளித்துள்ளார்.
தொழிலதிபர் பரிசளிப்பு
இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள தொழிலதிபர் குர்தீப் தேவ் பாத் என்பவர் தனது 9 ஏக்கர் நிலத்தில் கட்டடட பணிக்காக தனது ஒப்பந்ததாரருக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சை பரிசாக அளித்துள்ளார்.
ஒப்பந்ததாரர் ராஜீந்தர் சிங் ரூப்ராவிற்கு வழங்கப்பட்ட ரோலக்ஸ் வாட்ச், 18 காரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபின் ஜிராக்பூர் அருகே கட்டப்பட்டுள்ள ஆரம்பர பங்களாவானது கோட்டையை போல உள்ளது.
இதுகுறித்து தொழிலதிபர் கூறுகையில், "பாஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஷாகோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரர். இவர், 2 வருடத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டும், தினசரி பணியாளர்களை நிர்வகித்து கட்டட பணியை முடித்துள்ளார்.
இவரது தரம், வேகம் அர்ப்பணிப்பு பாராட்டிற்குரியது. இது ஒரு வீடு மட்டுமல்ல. இது பிரமாண்டமான கோட்டை. காலமற்ற நேர்த்தியை பிரதிபலிக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. தான் விரும்பிய பங்களாவை கட்டி முடித்ததற்காக இந்த பரிசளித்தேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |