சுவிட்சர்லாந்தில் ஒரு விநோத மோசடி: பணத்தை இழந்த தொழிலதிபர்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு விநோத மோசடியில் உள்ளூர் தொழிலதிபர் ஒருவர் 27,000 சுவிஸ் ஃப்ராங்குகளை இழந்தார்.
எதைச் சொன்னாலும் நம்பும் மக்கள்
இப்படிச் செய்தால் போதும் உங்கள் பணம் இரட்டிப்பாகும் என்று சொன்னால் போதும். அதை நம்ப இன்னமும் உலகமெங்கும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தான் செய்வான் என்று சொல்வதுபோல, இப்படி பேராசை பிடித்தவர்களை ஏமாற்றும் ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
விநோத மோசடி
சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாணத்தில், உள்ளூர் தொழிலதிபர் ஒருவரை அணுகிய ஒருவர், தன்னிடம் ஒரு ரசாயனம் உள்ளது என்றும், அந்த ரசாயனத்தில் பணத்தைக் கழுவினாலே, பணம் இரட்டிப்பாகிவிடும் என்றும் கூறியிருக்கிறார்.
அதை நம்பி இந்த தொழிலதிபர் 27,000 சுவிஸ் ஃப்ராங்குகளை அவரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால், பணத்தை வாங்கினவர், வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார். பணத்தை இழந்த அந்த தொழிலதிபர் பொலிசாரை அணுக, ஏமாற்றிய 39 வயது நபரை பொலிசார் தேடிவந்தார்கள்.
இந்நிலையில், அவர் ஜெனீவாவில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இப்படியெல்லாம் பணத்தை அதிகரிக்க முடியாது, இப்படிப்பட்ட மோசடிகளை நம்பாதீர்கள் என பொதுமக்களை எச்சரித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |