ரூ.25,000 கோடி சொத்தை 27 நாளில் இழந்த தொழிலதிபர்: அம்பானி, அதானியை விட இன்னும் பணக்காரர்?
உலக பணக்காரரான எலான் மஸ்க் வெறும் 27 நாட்களுக்கு ரூ.25,000 கோடியை இழந்த பிறகும் இந்தியாவின் அம்பானி, அதானி, ரத்தன் டாடா ஆகியோரை விட பணக்காரராக நீடிக்கிறார்.
சரிந்த சொத்து மதிப்பு
உலக பணக்காரர்களில் முதன்மையானவராக கருதப்படுவர் எலான் மஸ்க், இவர் டெஸ்லா மற்றும் எக்ஸ் என்ற சமூக வலைதளத்தின் உரிமையாளராக உள்ளார்.
2024ம் ஆண்டு தொடங்கிய முதல் 27 நாட்களில் மட்டும் $30.5 பில்லியன் அமெரிக்க டொலர்(ரூ.25,000 கோடி) சொத்தை இழந்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தரவு( Bloomberg Billionaire Index data) தரவுகளின் படி, இந்த சரிவின் மூலம் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு $200 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கீழ் சென்றுள்ளது என தெரியவந்துள்ளது.
COMEO/Shutterstock
2024 ஜனவரி 1ம் திகதியில் எலான் மஸ்க்கின் சொத்து சுமார் $299 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டு இருந்தது, ஆனால் 2024 ஜனவரி 26ம் திகதி சந்தை வர்த்தகத்தின் முடிவில் 13.3% சதவீதம் குறைந்து $199 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்தாக மாறியுள்ளது.
காரணம்
எலான் மஸ்கின் பிரதான வருமானம் மின்சார வாகனங்கள் மற்றும் நிலையான ஆற்றல் தீர்வுகளுக்கான நிறுவனமான டெஸ்லா நிறுவனத்திடம் இருந்து வருகிறது, கூடுதலாக சமூக ஊடக செயலியான X தளத்தில் இருந்தும் வருமானம் சேர்க்கப்படுகிறது.
2024ம் ஆண்டின் தொடக்க வாரத்தில் மின்சார வாகனங்கள் மற்றும் நிலையான ஆற்றல் தீர்வுகளுக்கான நிறுவனமான டெஸ்லாவின் மதிப்பு $94 பில்லியன் டொலர் சரிந்துள்ளது.
இந்த சரிவுக்கு ஹெர்ட்ஸ் குளோபல் ஹோல்டிங்ஸ் இன்க்(Hertz Global Holdings Inc) மூலம் உருவான மின்சார வாகனங்களுக்கான கொள்கை மாற்றம், பணியாளர் ஊதிய உயர்வு, சீன வாகனங்கள் மீதான விலை குறைப்பு மற்றும் அமெரிக்காவில் மின்சார வாகனங்கள் மீதான தேவை குறைந்தது ஆகியவை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த 2022 அக்டோபரில் $44 பில்லியன் தொகைக்கு எலான் மஸ்க் X தளத்தை கைப்பற்றிய பிறகு, அதன் மதிப்பு 71% சரிந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Elon Musk, Bloomberg Billionaire Index data, businessman, Money, net worth, market trade, Tesla, electric vehicles, sustainable energy solutions, X, Twitter, Hertz Global Holdings Inc, rising labour costs, electric vehicle demand, Chinese-manufactured cars, Mukesh Ambani, Ratan Tata, Gautam Adani, india