ரூ.127.5 கோடியில் ஆடம்பர பங்களாவை வாங்கிய தொழிலதிபர்.. நிறுவனத்தின் மதிப்பு இத்தனை ஆயிரம் கோடிகள்
டெல்லியில் அமைந்துள்ள ரூ.127.5 கோடி மதிப்பிலான பங்களாவை தனியார் கம்பெனி நிறுவனர் பானு சோப்ரா வாங்கியுள்ளார்.
பானு சோப்ரா
இந்திய மாநிலம், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவைச் சேர்ந்தவர் பானு சோப்ரா. இவர், அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் நிதி மற்றும் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
பின்பு, டெலாய்ட் நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றினார். அப்போது, அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் பானு சோப்ரா பயணம் செய்துள்ளார்.
போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கி உருளைக்கிழங்கு சிப்ஸில் முடிந்த கதை! ரூ.4,000 கோடி வருமானம் பெறும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்
அந்த சமயங்களில் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை எங்கு பெறுவது? எப்படி பெறுவது? என்ற பல பிரச்னைகளை சந்தித்துள்ளார். இது தான், இவர் நிறுவனம் தொடங்குவதற்கு முக்கியமாக இருந்தது.
Rategain நிறுவனம்
அதாவது இவர், தான் சந்தித்த பிரச்சனைகளை மக்களும் பெறக்கூடாது என்பதற்காக நுகர்வோருக்கான விலை ஒப்பீட்டு இணையதளமான Rategain என்ற இணையதளத்தை கடந்த 2004 -ம் ஆண்டு தொடங்கினார்.
அப்படி தொடங்கிய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் டிரிவாகோ, புக்கிங், எக்ஸ்பீடியா மற்றும் கிளியர்ட்ரிப் போன்ற பயண நிறுவனங்களும் அடங்கியிருக்கிறது.
ரூ.127.5 கோடியில் ஆடம்பர பங்களா
இந்நிலையில், அண்மையில் ரேட்கெயின் நிறுவனரான பானு சோப்ரா டெல்லி கோல்ஃப் லின்க்ஸ் சாலையில், ரூ.127.5 கோடிக்கு ஆடம்பரமான பங்களாவை வாங்கியுள்ளார்.
Zapkey.com -ல் அணுகப்பட்ட ஆவணங்களின் படி கடந்த பிப்ரவரி 24 -ம் திகதி அன்று பானு சோப்ரா மற்றும் மேகா சோப்ராவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முத்திரை தொகையாக .6.79 கோடி செலுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இவருடைய நிறுவனமானது ரூ.6,750 கோடி சந்தை மூலதனத்துடன் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், டெல்லி-என்சிஆர் பிராந்தியத்தில் விலையுயர்ந்த குடியிருப்புகளைக் வாங்கியவர்களில் பானு சோப்ராவும் ஒருவராவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |