ரூ.2000 முதலீட்டில்...ரூ.10 கோடி நிறுவனம்! 20 வயது இளம் பெண்ணின் சாதனை பயணம்
வெறும் ரூ. 2000 முதலீட்டில் 10 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை 20 வயதில் உருவாக்கிய ஷெல்லி புல்சந்தனி(Shelly Bulchandani),இந்தியாவில் தொழில்முனைவோர் ஆக சாதிக்க வேண்டும் என்று விரும்பும் இளைஞர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக உருவாகியுள்ளார்.
20 வயதில் 10 கோடி மதிப்புள்ள நிறுவனம்
தொழில்முனைவோராக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த ஷெல்லி புல்சந்தனி(Shelly Bulchandani), ஜெய்பூரில் விற்பனையாளர் ஒருவரிடம் இருந்து ரூ.2000க்கு முடி கொத்தை வாங்கியுள்ளார்.
அதை தன்னுடைய வீட்டில் இருந்த தையல் மிஷினில் ஒழுங்குபடுத்தி, தலை முடியுடன் ஒத்து போகும்படியான அளவிற்கு மாற்றியமைத்து உறவினர்களுக்கு முதலில் விற்பனை செய்துள்ளார்.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, இணைய தளம் ஒன்றை உருவாக்கி ஒப்பனை முடி விற்பனையை தொடங்கியுள்ளார்.
பின்னர் படிக்கும் போதே 2020ம் ஆண்டு Shell Hair என்ற நிறுவனத்தை தொடங்கி அதை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.
ஒற்றை நன்கொடையாளரிடம் இருந்து பெறப்பட்ட 100% ரெமி இயற்கை மனித முடியால் செய்யப்பட்ட ஒப்பனை முடி தயாரிப்புகளை ஷெல்லி புல்சந்தனி ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனை மூலம் சந்தைப்படுத்தி வருகிறார்.
சிறந்து தயாரிப்புடன் வரும் இவரது தயாரிப்புகள் போட்டியாளர்களின் விலையை விட 30 முதல் 40 சதவீதம் குறைவான விலையில் விற்பனை செய்வதால், ஒப்பனை முடி சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.
2021-2022ம் ஆண்டில் ஷெல்லி புல்சந்தனியின் Shell Hair நிறுவனம் ரூ.36 லட்சம் வருமானம் ஈட்டியது, தற்போது பெரும் வளர்ச்சிக்கு பிறகு, Shell Hair நிறுவனம் ஆண்டுக்கு 1.2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது.
ஷெல்லி புல்சந்தனி(Shelly Bulchandani) தற்போது இரண்டாம் ஆண்டு MSc IT பட்டப்படிப்பை படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளரை ஈர்த்த ஷெல்லி புல்சந்தனி
முதலீட்டாளர்கள் சந்திப்பில் தனது நிறுவனத்தின் வணிக பெருக்கத்திற்காக ஷெல்லி, ரூ.10 கோடி மதிப்பீட்டை கோரினார். இதற்கு 30 லட்சம் ரூபாய்க்கு 3 சதவீத பங்குகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.
ஆரம்பத்தில் ரூ. 30 லட்சத்துக்கு 5 சதவீத ஈக்விட்டியை தர அமன் குப்தா முன்வந்தார்.
ஆனால், கடந்த இரண்டு சீசன்களில் 2 முடி நிறுவனங்களை தவறவிட்டு விட்டதால் இதனை நழுவ விட தயாராக இல்லை என தெரிவித்து, 3 சதவீத ஈக்விட்டிக்கு 30 லட்சம் ரூபாயையும் வழங்க இறுதியில் ஒப்புக் கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
hair growth, Best Hair growth product, wigs, Toppers, Bangs, Best Hair wigs, Best Hair Wigs Company,Best Hair Wigs Company in india, Shelly Bulchandani, Shell Hair