சுவிஸ் இறைச்சிக் கடைக்காரருக்கு விதிக்கப்பட்ட அபராதம்: அவர் செய்த குற்றம்?
சுவிஸ் மாகாணமொன்றில் இறைச்சிக் கடைக்காரர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இறைச்சிக் கடைக்காரர் செய்த மோசடி
சுவிட்சர்லாந்தின் Thurgau மாகாணத்தில் இறைச்சிக் கடை ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த இறைச்சிக் கடைக்காரர் செய்த மோசடியை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அதாவது, சுவிட்சர்லாந்தில் இறைச்சிக்குத் தட்டுப்பாடு நிலவிய நேரத்தில், மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த இறைச்சியை அவர் விற்பனை செய்துள்ளார்.
இறைச்சிக் கடைக்காரர் முன்வைத்த வாதம்
தான், நல்ல, தரமான இறைச்சியையே விற்றதாகவும், தனது வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி திருப்திகரமானதாக இருந்ததாகவும் அவர் வாதம் முன்வைத்தார்.
ஆனால், வெளிநாட்டு இறைச்சியை சுவிஸ் இறைச்சி என்ற பெயரில் அவர் விற்றதாக அதிகாரிகள் குற்றம் சாட்டி, அவருக்கு கடுமையான அபராதம் விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்கள்.