ஏமாற்றமடைந்தோம்.. ஆனால் அதனை தகர்ப்போம்! மிரட்டல் வீரர் பட்லர்
நாங்கள் இன்னும் தொடரில் இருக்கிறோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது. எனினும் அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது.
அதாவது, குவாலிபையர் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் ராஜஸ்தான் அணி மோதும். அந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ளும்.
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் மிரட்டல் வீரரான ஜோஸ் பட்லர், 56 பந்துகளில் 89 ஓட்டங்கள் விளாசினார். போட்டிக்கு பின்னர் பேசிய பட்லர் கூறுகையில்,
'முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதற்கு நாங்கள் ஆசைப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம், நாங்கள் இன்னும் தொடரில் இருக்கிறோம். இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் ஏமாற்றமடைந்தோம், ஆனால் நாங்கள் அதைத் தகர்ப்போம். நாங்கள் இன்னும் போட்டியில் இருக்கிறோம்.
தொடக்கத்தில் சிக்கல்கள் இருந்தாலும், பின்னர் சஞ்சு வந்து இந்த இன்னிங்சை விளையாடினார். இது என்னிடமிருந்து பதற்றத்தை நீக்கியது. நான் தொடர்ந்து விளையாடி இறுதியில் வேகமாக ஓட்டங்களை எடுத்தேன்.
இது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான மைதானம், எப்பொழுதும் கொஞ்சம் பந்துவீச கடினமாகவும் இருக்கும் என்பதை நாங்கள் அறிந்து வைத்திருந்தோம்' என தெரிவித்தார்.