வெண்ணெய் சாப்பிட்டால் இந்த நல்லதெல்லாம் நடக்கும்! ஆனா இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது
வெண்ணெய் உடலுக்கு நன்மைகளையும் கொடுக்கிறது அதே சமயம் தீமைகளையும் கொடுக்கிறது, அதனால் அதை சரியான அளவில் சாப்பிடுவதே சிறந்தது.
வெண்ணெய் மலச்சிக்கலைத் தீர்க்கிறது. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
தோல் வறட்சி, சொரசொரப்பு, அதனால் உண்டாகும் அரிப்பு உள்ளவர்கள் உடலில் வெண்ணெய் தடவி பிறகு குளித்தால் சரியாகும்.
பாலில் கொஞ்சம் பனங்கற்கண்டு, கொஞ்சம் வெண்ணெய் போட்டு குடித்தால் தொண்டைப் புண், வலி குணமாகும்.
எடைக் குறைவுடன் இருக்கும் குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுக்கலாம். அதே போல குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.
இதயநோய், உடல் பருமன் உள்ளவர்கள் வெண்ணெய் எடுத்துக் கொள்ளக்கூடாது.
வெண்ணையை அதிகமாக எடுத்துக் கொண்டால், பசி எடுக்கும் தன்மையை குறைந்துவிடும். இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக பயன்படுத்துவது நலம் பெயர்க்கும்.