உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் மோரின் பலன்கள்! யார் குடிக்கக்கூடாது?
மோர்
நம் பாரம்பரியத்தில் மோர் அருந்தும் பழக்கம் உள்ளது. மோர் தாகத்தை தீர்க்கும். மோரில் புரோபயாட்டிக் (Probiotic) என்ற பாக்டீரியா இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும், குடலை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்கிறது.
பொதுவாக கோடை காலத்தில் வெயிலால் நமது உடலில் நீர்ச்சத்து குறையும், அப்போது, வெயிலின் தாகத்தை தணித்து நீர் ஏற்றத்துடன் நமது உடலை வைத்திருக்க மோர் உதவி செய்யும்.
மோரில் குறைந்த கலோரி, அத்தியாவசிய ஆக்சிஜனேற்றிகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரத சத்து உட்பட பல எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது.
சரி... தினமும் மோர் குடித்தால் நமக்கு கிடைக்கும் பயன்களைப் பற்றி பார்ப்போம் -
உடல் எடை குறைக்க
தினமும் காலை வெறும் வயிற்றில் மோர் குடித்து வந்தார் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறையச் செய்யும்.
உடல் குளிர்ச்சிக்கு
தினமும் காலை வெறும் வயிற்றில் மோர் குடித்து வந்தால், உடல் குளிர்ச்சி பெறும்.
செரிமானத்திற்கு
தினமும் காலை வெறும் வயிற்றில், மோருடன் சிறிது, இஞ்சி, சீரகம் சேர்த்து குடித்து வந்தால் செரிமானம் சீராகும்.
கல்லீரலுக்கு
தினமும் காலை வெறும் வயிற்றில், மோர் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் பி2 நம் வயிற்றில் உள்ள கல்லீரல் நன்றாக செயல்பட உதவி செய்யும்.
முக அழகிற்கு
தினமும் மோர் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறிவிடும். இதனால், முகம் பொலிவு பெறும். மோரை எடுத்து நம் முகத்தை மசாஜ் செய்தால் முகம் பட்டுபோல் மிளிரும்.
சாப்பிட கூடாதவர்கள் -
பால் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் பிரச்சினை உள்ளவர்கள் மோர் குடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் மோர் குடித்தால் வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்படும்.