Butter Naan: சுவையான நாண் ரொட்டி.., இனி வீட்டிலேயே செய்யலாம்
நிறைய பேருக்கு ஹோட்டலுக்கு சென்றால் நாண் ரொட்டி சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் பெரும்பாலும் இதை யாரும் வீட்டில் செய்ய மாட்டார்கள். இனி இந்த நாண் ரொட்டியை சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.
இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஈஸ்ட்- 1 ஸ்பூன்
- சர்க்கரை- 1 ஸ்பூன்
- மைதா- 2 கப்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- வெண்ணெய்- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு சின்ன பவுலில் 1 கப் தண்ணீர் சேர்த்து அதில் சர்க்கரை சேர்த்து கலந்து பின் ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் அப்படியே விட்டால் ஈஸ்ட் நன்கு பொங்கி வந்திருக்கும்.
பின் ஒரு பாத்திரத்தில் மைதா சேர்த்து அதில் எண்ணெய், உப்பு சேர்த்து அதில் ஈஸ்ட் சேர்த்து பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிணைந்து கொள்ளவும்.
அடுத்து பிணைந்த மாவை 2 மணி நேரம் அப்படியே மூடி போட்டு வைக்கவும்.
இதனைத்தொடர்ந்து மாவை சிறிய உருண்டையாக எடுத்து அதனை வட்ட வடிவில் தேய்த்து இதன் மேல் கொத்தமல்லி தூவி தேய்த்து அதன் அடிப்பகுதியில் சிறிதளவு தண்ணீர் தேய்த்துக்கொள்ளவும்.
பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் தேய்த்த மாவை தண்ணீர் தேய்த்த பகுதி அடியில் இருக்குமாறு தவாவில் போட்டு சுட்டு எடுத்துக்கொள்ளவும்.
தண்ணீர் தேய்த்த பகுதி தவாவில் ஒட்டிக்கொள்ளும் எனவே அதனை தவாவோடு திருப்பி தீயில் காட்டி பின் எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு தட்டில் போட்டு அதன் மேல் வெண்ணெய் தேய்த்தால் சுவையான நாண் ரொட்டி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |