ஒவ்வொரு நொடியையும் இந்த அணியுடன் நேசிக்கிறேன்: அதிரடி மன்னன் ஜோஸ் பட்லர்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர், தனது அணியுடன் ஒவ்வொரு நொடியையும் நேசிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜோஸ் பட்லர் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக உருவெடுத்துள்ளார்.
இதுவரை 3 சதங்களை இந்த தொடரில் அடித்துள்ள அவர், 7 போட்டிகளில் விளையாடி 491 ஓட்டங்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள கே.எல்.ராகுல் 265 ஓட்டங்களே எடுத்துள்ளார். வேறு எந்த வீரரும் 300 ஓட்டங்களை கூட எட்டாத நிலையில் பட்லர் மட்டும் 500 ஓட்டங்களை நெருங்கியுள்ளார். இதன் மூலம் ஆரஞ்சு நிற தொப்பியையும் தன்னகத்தே அவர் வைத்துள்ளார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் 'சிறந்த தருணங்களை அனுபவியுங்கள்! ஒவ்வொரு நொடியையும் இந்த அணியுடன் நேசிக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.
Enjoy the good times! Loving every second with this team ? pic.twitter.com/uBXwWJBqD5
— Jos Buttler (@josbuttler) April 23, 2022
ஜோஸ் பட்லரின் ஆட்டங்களை பார்த்து வியந்த மற்ற அணியின் ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.