நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த இருவர்!
பட்லர் 47 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்கள் விளாசினார்
நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 179 ஓட்டங்கள் குவித்துள்ளது.
பிரிஸ்பேனில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இங்கிலாந்து முதலில் துடுப்பாடியது.
நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய பட்லர் - ஹேல்ஸ் கூட்டணி, அதன் பின்னர் அதிரடியில் மிரட்டியது. இவர்களது கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 81 ஓட்டங்கள் சேர்த்தது.
Setting the tone at the top! ??
— England Cricket (@englandcricket) November 1, 2022
Scorecard: https://t.co/zIxvMw3gn5#T20WorldCup | @AlexHales1 pic.twitter.com/JWPKqKEDlt
தனது 11வது அரைசதத்தை கடந்த ஹேல்ஸ் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மொயீன் அலி 5 ஓட்டங்களிலும், லிவிங்ஸ்டன் 20 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
மறுபுறம் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் 73 ஓட்டங்கள் விளாசினார். அணியின் ஸ்கோர் 162 ஆக உயர்ந்தபோது பட்லர் ரன்அவுட் ஆனார்.
Making his mark in his 100th IT20 ?
— England Cricket (@englandcricket) November 1, 2022
Scorecard: https://t.co/zIxvMw3gn5#T20WorldCup | @JosButtler pic.twitter.com/Ux5C3f3Imn
இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் குவித்தது.