உலகக்கோப்பையில் இமாலய சாதனை படைத்த வீரர்கள்!
தென் ஆப்பிரிக்க வீரர்களின் சாதனையை இங்கிலாந்தின் பட்லர் - ஹேல்ஸ் கூட்டணி முறியடித்துள்ளது
தனது அணியின் துடுப்பாட்ட வரிசையின் பலமும், ஹேல்ஸின் ஆக்ரோசமான அணுகுமுறையும் தான், நடுநிலையில் தனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது என இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறியுள்ளார்
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பட்லர் - ஹேல்ஸ் இணை புதிய சாதனையைப் படைத்தது.
அடிலெய்டில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் 169 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கை களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் (80), அலெக்ஸ் ஹேல்ஸ் (86) இருவரும் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்தக் கூட்டணி 16 ஓவர்களில் 170 குவித்தது. இதன்மூலம் அதிக ஓட்டங்கள் குவித்த தொடக்க வீரர்கள் சாதனையை பட்லர் - ஹேல்ஸ் இணை படைத்துள்ளது.
AP
இதற்கு முன்பாக, தென் ஆப்பிரிக்க வீரர்களான டி காக் - ரோஸோவ் 168 ஓட்டங்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. வங்கதேசத்திற்கு எதிராக கடந்த அக்டோபர் 27ஆம் திகதி நடந்த போட்டியில் டி காக் - ரோஸோவ் இந்த சாதனையை படைத்திருந்தது.
அந்த சாதனையை இரண்டு வாரங்களில் பட்லர் - ஹேல்ஸ் இணை முறியடித்துள்ளது. இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனே, சங்ககாரா இணை 166 ஓட்டங்கள் குவித்த சாதனை 12 ஆண்டுகள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
AFP