அடிபோலி..! சேட்டனாக மாறிய சிக்ஸர் மன்னன் பட்லர்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் கருப்பு நிற வேட்டியணிந்து நிற்கும் புகைப்படத்தை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிரட்டி வருகிறது. 5 வெற்றிகளை பெற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்குபவர் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஸ் பட்லர் இந்த தொடரில் சிக்ஸர் மன்னனாக திகழ்வதுடன், எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார்.
Adipoli Buttler Chettan ?? #RoyalsFamily pic.twitter.com/wfjNwOuF6g
— Rajasthan Royals (@rajasthanroyals) April 24, 2022
இந்த நிலையில், ஜோஸ் பட்லர் அணித்தலைவர் சஞ்சு சாம்சனுடன் டி-சர்ட் மற்றும் கருப்பு நிற வேட்டி அணிந்து நிற்கும் புகைப்படத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதனுடன் 'அடிபோலி பட்லர் சேட்டன்.. ராயல்ஸ் குடும்பம்' எனவும் குறிப்பிட்டுள்ளது.
சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் பட்லருக்கு தங்களது பிரதான உடையான கருப்பு நிற வேட்டியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.