பொளந்துகட்டிய பட்லர், கிளாஸன் கூட்டணி! சுக்குநூறான ஹாரி புரூக் படை
The Hundred தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது.
ஜோஸ் பட்லர்
நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் மற்றும் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிகள் மோதிய போட்டி எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடந்தது.
The Manchester crowd enjoyed that finish! 🔈
— The Hundred (@thehundred) August 17, 2025
Heinrich Klaasen scores 4 runs on the last ball, and reaches his 50 in the process! 🤩#TheHundred pic.twitter.com/edcGICNetX
முதலில் ஆடிய மான்செஸ்டர் அணி 3 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் குவித்தது. ஜோஸ் பட்லர் (Jos Buttler) ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் விளாசினார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹெய்ன்ரிச் கிளாஸன் (Heinrich Klaasen) ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் குவித்தார்.
மில்லர் 38 ஓட்டங்கள்
பின்னர் ஆடிய நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் 87 பந்துகளில் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது. டேவிட் மில்லர் 22 பந்துகளில் 38 ஓட்டங்கள் விளாசினார்.
சோனி பேக்கர் மற்றும் டங் தலா 3 விக்கெட்டுகளும், ரவீந்திரா, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
And that's that! ✅
— The Hundred (@thehundred) August 17, 2025
Sonny Baker finishes the match off and Manchester Originals make it two wins at the Northern derby! 👏#TheHundred pic.twitter.com/YGGASWsN6V
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |