இலங்கை நல்ல அணி.. நாங்கள் ஆபத்தான அணி: இங்கிலாந்து கேப்டன்
சிட்னியில் 5ஆம் திகதி இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன
இலங்கைக்கு எதிராக கடினமான போட்டியை எதிர்பார்ப்பதாக பட்லர் தெரிவித்துள்ளார்
இலங்கை அணிக்கு எதிராக மிகவும் கடினமான போட்டியை எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்பேனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 73 ஓட்டங்கள் விளாசிய இங்கிலாந்து கேப்டன் பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். போட்டிக்கு பின்னர் பேசிய அவர்,
'இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் கடினமானது. நாங்கள் மிகவும் ஆபத்தான அணி, நாங்கள் போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வீரர்களை முழுமையாக கொண்டுள்ளோம். இலங்கை ஒரு நல்ல அணி, அவர்களுக்கு எதிராக மிகவும் கடினமான போட்டியை எதிர்பார்க்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
t20worldcup
Twitter(@OfficialSLC)