நாவூறும் சுவையில் பட்டன் பஜ்ஜி.., எப்படி செய்வது?
பஜ்ஜி என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதுவும் மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் பட்டன் பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பீர்க்கங்காய்- 1
- கடலை மாவு- ½ கப்
- அரிசி மாவு- ½ கப்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- பெருங்காயம்- ¼ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தண்ணீர்- சிறிதளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் பீர்க்கங்காயை கழுவி தோலுரித்து சிறிய சிறிய வட்டமாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயம், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
இறுதியாக வெட்டிவைத்த பீர்க்கங்காயை மாவில் நனைத்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான பட்டன் பஜ்ஜி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |