ரூ.60 ஆயிரத்திற்கும் குறைவான விலை கொண்ட ஹீரோ பைக்.., வாங்குவதற்கு அலைமோதும் மக்கள்
இந்திய வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்கும் பைக்கான ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Hero HF Deluxe
கம்யூட்டர் ரக பைக்குகளை இந்தியர்கள் அதிகமாக விரும்பும் நிலையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக்கை விரும்பி வாங்குகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 46,627 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 71,477 Hero HF Deluxe பைக்குகுகளை விற்பனை செய்துள்ளது.
இதனால் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட Top 10 Two Wheelers July 2025 பட்டியலில் Hero HF Deluxe பைக் 6வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பைக்கின் ஆரம்ப விலை வெறும் 59,998 ரூபாய். இது EX Showroom விலையாகும். அதேபோல இந்த பைக்கின் Top Variant விலை ரூ.73550 ஆகும்.
இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள 97.2 cc engine ஒரு லிட்டருக்கு 68 கிலோ மீட்டர் Mileage வழங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |