ட்ரம்பின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்க பிரித்தானிய தயாரிப்புகளை வாங்க வலியுறுத்தல்
ட்ரம்பின் வரிவிதிப்புகளைக் குறித்து கலங்கியிருந்த பல நாடுகளும், தற்போது ட்ரம்புக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகிவருகின்றன.
பிரித்தானிய தயாரிப்புகளையே வாங்குவோம்
அவ்வகையில், ட்ரம்பின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்க, பிரித்தானிய தயாரிப்புகளை வாங்க பிரித்தானிய அரசியல் கட்சி ஒன்று மக்களை வலியுறுத்தியுள்ளது.
கனடாவை முன்மாதிரியாகக் கொண்டு இந்த முடிவை எடுக்குமாறு பிரித்தானியாவின் லிபரம் டெமாக்ரட்ஸ் கட்சி மக்களை வலியுறுத்தியுள்ளது.
கனடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கனடா பிரதமரான மார்க் கார்னி, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், எங்கெல்லாம் கனேடிய பொருட்களை வாங்க வாய்ப்புள்ளதோ, அங்கெல்லாம் கனேடிய தயாரிப்புகளையே வாங்குங்கள் என தன் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.
அதேபோல, பிரித்தானிய அரசும், ’Made in Britain’ லோகோவுடன், பிரித்தானிய தயாரிப்புகளையே வாங்க பிரித்தானிய மக்களைத் தூண்டும் வகையில் ஊடகங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும் என லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |