கிரெட் கார்டு வாங்கிவிட்டு யூஸ் பண்ணாதவரா நீங்கள்! இந்த பிரச்சனையை சரிசெய்யுங்கள்
பொதுவாக பலரும் கிரெடிட் கார்டு குறித்த விவரங்கள் தெரியாமல் அதனை வாங்கிவிட்டு, சிக்கலில் தவித்து வருகின்றனர். அதிலும், ஒரு சிலர் கிரெடிட் கார்டு வாங்கிவிட்டு, அதனை யூஸ் பண்ணாமல் பெருமையாக பேசுவார்கள். அவர்கள், கிரெட் கார்டு குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்.
அதிகமாகிய கிரெடிட் கார்டு புழக்கம்
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கிரெடிட் கார்டு வைத்துள்ளனர். பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிரெடிட் கார்டை வழங்குவதற்கு முன்வருகின்றனர். அதனாலயே, பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு வாங்கிக் கொள்கின்றனர். பின்பு, மாத கடைசியில் பணம் தீர்ந்தவுடன் இதன் மூலம் பணம் பெற்றுக் கொள்கின்றனர்.
இதனையடுத்து, நீங்கள் கிரெடிட் கார்டு தொகையை சரியாக செலுத்த வேண்டும். காலம் தவறி செலுத்தாமல் விட்டால் உங்களுக்கான வட்டி பெருகும். இதனால், நீங்கள் சிக்கலில் மாட்ட வாய்ப்புள்ளது.
இன்னும் சிலர், கிரெடிட் கார்டு வாங்குவதற்கு விருப்பம் இல்லாமல் இருந்தால் கூட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தொடர் அழுத்தத்தால் அதனை வாங்கிக் கொள்கின்றனர். அதாவது, தற்போது தேவையில்லை என்றால் கூட, எதிர்காலத்தில் தேவைப்படும் என்பதற்காகவே வாங்கி கொள்கின்றனர்.
மேலும், உங்களுக்கு கிரெடிட் கார்டு வாங்குவதற்கு விருப்பம் இல்லையென்றால் அதை நேரடியாகவே கூறிவிடுங்கள். கிரெடிட் கார்டு வாங்கிவிட்டு அதனை நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அதற்கான பிரச்சனையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
கிரெடிட் கார்டு யூஸ் பண்ணாமல் இருந்தால் என்ன நடக்கும்?
கிரெடிட் கார்டு வாங்கிவிட்டு அதனை பயன்படுத்தாமல் இருந்தால் உங்களுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது, நீங்கள் நீண்ட காலங்களாக கிரெடிட் கார்டு வாங்கி பயன்படுத்தாமல் இருந்தாலும் ஆண்டுதோறும் ஏஎம்சி என்ற பெயரில் ஆண்டு பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.
நாம் கிரெடிட் கார்டு வாங்கிவிட்டு அதனை பயன்படுத்தாமல் தானே இருக்கிறோம். நமக்கு எந்த பிரச்சனையும் வராது என்று நினைத்தால் அது தான் தவறு.
கிரெடிட் கார்டிற்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம் செலுத்தாமல் இருந்தால் வட்டிக்கு வட்டி என உயர்ந்து பெரிய தொகையில் வந்து நிற்கும். அது உங்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்துவது மட்டுமல்லாம், சிபில் ஸ்கோரையும் பாதிக்கும்.
அதனால், நீங்கள் கிரெடிட் கார்டு வாங்கிவிட்டு அதனை யூஸ் பண்ணாமல் இருக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனங்களை தொடர்பு கொண்டு அதனுடைய செயல்பாட்டை நிறுத்துங்கள். மேலும் என்ஓசி என்னும் தடையில்லா சான்றிதழையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |