ரகசிய சிகிச்சை மேற்கொள்ளும் சமந்தா? வெளியாகும் தகவல்கள்
நடிகை சமந்தா தனது வீட்டிலேயே ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசித்திர நோய்
பிரபல நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மயோடிசிஸ் எனும் தசை ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நோயுடன் போராடி வருவதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற சமந்தா, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அவரது செய்தித் தொடர்பாளர் இதனை மறுத்துள்ளார். மேலும் சமந்தா வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆயுர்வேத சிகிச்சை
இதற்கிடையில் சமந்தா கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாகவும், ஆனால் அதில் பூரண குணமடைய வாய்ப்பு இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.
எனினும் சமீபத்திய கூற்றின்படி, தனது வீட்டில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதால் சமந்தாவின் ஆரோக்கியம் மேம்படுவதாகவும், விரைவில் அவர் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமந்தாவின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து எந்த தகவலும் இல்லை.