தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்
by election announced for madurantakam and dharapuram: தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைதேர்தல்
தமிழ்நாட்டில் அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
மேலும், 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானாதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் தேர்தல் வழக்கு, இருப்பதால் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்கும் எனவும், செப்டம்பர் 16ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும், வேட்பு மனுவை திரும்ப பெற செப்டம்பர் 9 ஆம் திகதி செப்டம்பர் 17ஆம் திகதி கடைசி நாள் எனவும், வேட்பு மனு பரிசீலனை செப்டம்பர் 17 நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் திகதி எனவும், வாக்கு எண்னிக்கை அக்டோபர் 8 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |