தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்.., இரு தொகுதிகளிலும் தவெக முன்னிலை
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் கடந்த 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
மதுராந்தகத்தில் 86.26 சதவீதமும், தாராபுரத்தில் 80.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றது.

தாராபுரம் தொகுதியில் தபால் வாக்கு மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 2 சுற்றுகளில் தவெக முன்னிலை பெற்றது.
அதன்பின் எண்ணப்பட்ட வாக்குகளில் தவெக பின்னுக்குத்தள்ளப்பட்டு அதிமுக முன்னிலை வகித்தது.
இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா தற்போது முன்னிலை வகிக்கிறார்.
தாராபுரத்தில் 4 சுற்றுகளில் அதிமுக முன்னிலை பெற்ற நிலையில் 5,6 சுற்றுகள் முடிவில் தவெக முன்னிலை வகிக்கிறது.
மேலும், மதுராந்தகம் தொகுதியில் 3வது சுற்று முடிவில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.