மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்.., தொடங்கிய வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இன்று இடைத்தேர்தல்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. பின்னர் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இதனால் இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், சிபிஎம் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாதக சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, தமிழ்நாடு, மேற்குவங்கம், புதுச்சேரியில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், அசாமில் ஒரு மக்களவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அனைத்து தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் வரும் 9ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |