'மே இறுதிக்குள்.' நாட்டு மக்களுக்கு பிரித்தானிய அரசு கொடுத்துள்ள முக்கிய வாக்குறுதி!
மே மாத இறுதிக்குள் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கும் என பிரித்தானிய சுகாதார செயலாளர் உறுதியளித்துள்ளார்.
பிரித்தானிய அரசு வரும் பிப்ரவரி 15-ஆம் திகதிக்குள், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னணி சுகாதார மற்றும் பராமரிப்பு தொழிலாளர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆகிய முதல் நான்கு முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசி போட்டுவிடவேண்டும் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டுவருகிறது.
அந்த வகையில், வியாழக்கிழமை நிலவரப்படி கிட்டத்தட்ட 11 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய இலக்கை அடைய மேலும் 4 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க செயல்பட்டுவருகிறது.
அதனைத் தொடர்ந்து, வரும் மார்ச் - ஜூன் மாதங்களில் முதல் 9 முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசி போடுவது பிரித்தானிய அரசு லட்சியமாகக் கொண்டுள்ளது.
அதனடிப்படையில், மே மாத இறுதிக்குள் நாட்டில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என பிரித்தானிய சுகாதார செயலாளர் Matt Hancock உறுதியளித்துள்ளார்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது மிகக் கடினம் என்றாலும், அதற்கான பணிகள் துரிதமாக நடத்தப்பட்டுவருகிறது என்றும் அவர் கூறினார்.