15 மில்லியன் மின்சார கார்கள் உற்பத்தி., சாதனை படைத்த சீன நிறுவனம்
சீனாவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான BYD, உலகளவில் 1.5 கோடி (15 மில்லியன்) EV உற்பத்தி சாதனையை எட்டியுள்ளது.
இந்த முக்கிய நிகழ்வு, ஜினான் தொழிற்சாலையில் Denza N8L SUV வெளியீட்டின் போது நடந்தது. இதன் மூலம் Denza N8L மாடலின் 15,000-வது வாகனமும் தயாரிக்கப்பட்டது.
உலகளாவிய விற்பனை
2025 ஜனவரி முதல் நவம்பர் வரை BYD, 41.82 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 11.3 சதவீதம் வளர்ச்சியாகும்.
அதேபோல், வெளிநாட்டு விற்பனை 9.17 லட்சமாக உயர்ந்து, 2024-ல் பதிவான எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.
BYD தற்போது 119 நாடுகள் மற்றும் 6 கண்டங்களில் வாகனங்களை விற்பனை செய்கிறது.

இந்திய சந்தை நிலை
இந்தியாவில், 2022-ஆம் ஆண்டு Atto 3 மாடலுடன் நுழைந்த BYD நிறுவனம், பின்னர் Seal, eMAX 7 MPV, Sealion SUV போன்ற மாடல்களை அறிமுகப்படுத்தியது.
ஆனால், 2025 நவம்பரில் BYD-யின் விற்பனை 417 யூனிட்கள் மட்டுமே பதிவானது.
காரணம், BYD வாகனங்கள் பிரீமியம் விலை (ஆரம்ப விலை 24.99 லட்சம்) கொண்டதால், மாஸ் மார்க்கெட்-இல் புகழ் பெறவில்லை.
இந்தியாவில் உள்ளூர் தயாரிப்பு மற்றும் அரசு பாதுகாப்பு கொள்கைகள், BYD-க்கு சவாலாக உள்ளன.
எதிர்கால திட்டங்கள்
BYD, ஹைதராபாத்தில் ரூ.85,000 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதில் பேட்டரி உற்பத்தி பிரிவு மற்றும் ஆண்டுக்கு 6 லட்சம் EV உற்பத்தி திறன் இருக்கும்.
உள்ளூர் உற்பத்தி அதிகரித்தால், விலை குறைந்து இந்திய சந்தையில் BYD போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BYD 15 million EV production milestone 2025, Denza N8L SUV BYD Jinan factory output, BYD global EV sales 4.18M Jan–Nov 2025, BYD overseas sales 917,000 six continents, BYD India EV sales November 417 units VAHAN, BYD Atto 3 Seal eMAX 7 Sealion SUV India, BYD premium EV pricing Rs 24.99 lakh onwards, BYD Hyderabad plant Rs 85,000 crore investment, BYD battery production unit 600,000 EV capacity, Tata EV vs BYD India market competition