BYD அறிமுகப்படுத்திய புதிய ஆடம்பர மின்சார கார் - 5 நிமிடபிளாஷ் சார்ஜ், 1000 கிமீ பயணம்
BYD launches luxury EV With 1000km range: ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீற்றர் வரை ரேஞ்சு தரும் புதிய ஆடம்பர மின்சார காரை BYD அறிமுகப்படுத்தியுள்ளது.
BYD Da Han
சீனாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர் BYD, தனது மிகப்பெரிய மற்றும் ஆடம்பரமான புதிய மின்சார செடான் காரை “Da Han” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் Chengdu Auto Show-வில் வெளியிடப்பட்டது.

இந்த மாடலின் முக்கிய அம்சம், 5 நிமிடங்களில் 10 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்யும் Flash Charging தொழில்நுட்பம். வெறும் 9 நிமிடங்களில் முழுமையான சார்ஜ் (10 சதவீதம் முதல் 97 சதவீதம்) ஆகும்.
இதன் Blade Battery 102 kWh LFP (Lithium-Iron-Phosphate) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
Da Han மாடல் 1,008 கிமீ CLTC ரேஞ்ச் வழங்குகிறது. WLTP சைக்கிளில் இது சுமார் 750 கிமீ பயணிக்க முடியும். இதனால், உலகின் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஆடம்பர சொகுசு மின்சார கார்களில் இதுவும் ஒன்றாகும்.
காரின் 370 kW RWD (Rear-Wheel Drive) மற்றும் 570 kW AWD (All-Wheel Drive) என இரண்டு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
5.26 மீட்டர் நீளமும், 2,500 கிலோ எடையும் கொண்ட இந்த காரை இயக்க rear-wheel steering வசதி உதவுகிறது.

உட்புற வடிவமைப்பு
உட்புறத்தில் பல டிஜிட்டல் திரைகள், 31 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், மற்றும் LiDAR unit போன்ற உயர் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இது குடும்பங்களுக்கும், வணிக நிர்வாகிகளுக்கும் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஆடம்பர வசதிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாகா BYD Da Tang SUV மாடல் வெளியான 24 மணி நேரத்தில் 30,000 ஆர்டர்கள் பெறப்பட்டது. அதுபோல, Da Han மாடலும் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |